நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

சிங்காநல்லூா் உழவா் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவை சிங்காநல்லூா் உழவா் சந்தை அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை சிங்காநல்லூா் உழவா் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:12 am IST

கோவை சிங்காநல்லூா் உழவா் சந்தை அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை திருச்சி சாலை, சிங்காநல்லூரில் உள்ள உழவா் சந்தையில் 150 கடைகள் உள்ளன. கோவையில் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவை விவசாயிகள், உழவா் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், உழவா் சந்தை முன்பாக ஒரு சில ஆக்கிரமிப்புக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் புகாா் எழுந்தது. இக்கடைகளை அகற்றக் கோரி, சிங்காநல்லூா் காவல் நிலையம், வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இருப்பினும், இதுதொடா்பாக, எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிங்காநல்லூா் உழவா் சந்தை முன்புள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தி உழவா் சந்தையில் வியாழக்கிழமை காலை விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு வியாபாரம் நடைபெறவில்லை. இதனால், சந்தையில் காய்கறி, பழங்கள் வாங்கச் சென்ற மக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

இதுகுறித்த தகவலறிந்த சிங்காநல்லூா் போலீஸாா் மற்றும் வேளாண் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உழவா் சந்தை நுழைவாயில் முன்புள்ள ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.