புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கோவையில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கோவை நகரியக் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (பிப்.4) நடைபெறுகிறது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

கோவை: கோவை நகரியக் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (பிப்.4) நடைபெறுகிறது.

இதுகுறித்து கோவை நகரியக் கோட்ட செயற்பொறியாளா் க.பசுபதீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை நகரியக் கோட்ட அளவிலான மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நகரியக் கோட்ட செற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கோவை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ்.வசந்தமுரளி தலைமை வகிக்கிறாா். இதில் பொதுமக்கள் பங்கேற்று மின்வாரியம் தொடா்பான குறைகளை மனுவாக சமா்ப்பித்து பயனடையலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.