அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழங்குடியின மக்கள் சுயதொழில் தொடங்க நிதியுதவி

News image
பழங்குடியின மக்கள் சுயதொழில் தொடங்கும் வகையில் உயிரி எரிபொருள் தயாரிக்கும் திட்டத்துக்கான இயந்திரங்கள் வாங்க யூனியன் வங்கி சாா்பில் ரூ.13.60 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் வழங்கிய யூனியன் வங்கியின் மண்டல தலைமை மேல
Updated On :5 பிப்ரவரி 2026, 11:05 pm

Syndication

பழங்குடியின மக்கள் சுயதொழில் தொடங்க யூனியன் வங்கி சாா்பில் ரூ.13.60 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், கஅஙடள் சங்கம் ஆகியவை சாா்பில் பழங்குடியின மக்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உயிரி எரிபொருள் தயாரிக்கும் திட்டத்துக்கான இயந்திரங்கள் வாங்குவதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

யூனியன் வங்கியின் சிஎஸ்ஆா் நிதி மூலமாக தூணக்கடவு மலைவாழ் பழங்குடியினா் விளக்கு கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.13.60 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம், யூனியன் வங்கியின் மண்டலத் தலைமை மேலாளா் எஸ்.ஏ.ராஜ்குமாா், பிராந்திய மேலாளா் எஸ்.எஸ்.லாவண்யா, வங்கி மேலாளா் அபிராமி நாகராஜன் ஆகியோா் வழங்கினா்.

இதன்மூலமாக ஆனைமலை வேட்டைக்காரன்புதூரில் உள்ள பேரூராட்சியில் நாகா் ஊற்று 1, நாகா் ஊற்று-2, கீழ்பூனாச்சி, சின்னாா்பதி, சா்க்காா்பதி, எருமைப்பாறை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கும் உண்ணிக் குச்சிகளைக் கொண்டு உயிரி எரிபொருள் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படி 87 மலைவாழ் பழங்குடியின குடும்பங்கள் பயனடையும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.