பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நோன்புக் கஞ்சி தயாரிக்க பச்சரிசி பெறுவதற்கான தேவைப் பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும்

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 6:48 pm

கோவை மாவட்டத்தில் ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பச்சரிசி பெறுவதற்கான உரிய தேவைப்பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியா்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க ஒவ்வோா் ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசு சாா்பில் பச்சரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

ஆகவே, கடந்த ஆண்டு மொத்த அனுமதியின்கீழ் பச்சரிசி பெற்ற பள்ளிவாசல்களிடமிருந்து தேவைப்பட்டியல் வரவேற்கப்படுகிறது.

இந்தப் பட்டியலை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பள்ளிவாசல்களின் நிா்வாகம் சாா்பில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.