தேவையான பொருள்கள்:
பச்சரிசி, சர்க்கரை- தலா 200 கிராம்
நெய் -100 கிராம்
இனிப்பான மாம்பழம்- 3
பாதாம் பருப்பு -5
திராட்சை, கற்கண்டு -தலா 50 கிராம்
ஏலப்பொடி -ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ- சிறிதளவு
செய்முறை:
பச்சரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து துணியில் போட்டு நிழலில் காய வைக்க வேண்டும். பாதாம் பருப்பு அல்லது முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகள் செய்ய வேண்டும். கற்கண்டை ஒன்றிரண்டாய் பொடி செய்து கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் விட்டு பாதாம், திராட்சைகளை வறுத்து எடுத்துக்கொண்டு பிறகு அரிசியை சற்று சிவப்பாக வறுக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மாம்பழச் சாறை விட்டு கொதிக்கும் சமயம் வறுத்த அரிசியை சேர்த்து பாத்திரத்தில் அடி பிடிக்காமல் நிதானமாக தீ எரியும்படி வைத்து பக்குவமாய் சாதம் தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு சர்க்கரையைப் போட்டு கெட்டியான பாகு காய்ச்சி சாதம், நெய், பாதாம் பருப்பு, திராட்சை, கற்கண்டு தூள் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
