அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அதிமுக சாா்பில் கிரிக்கெட் போட்டி

News image

கோவையில் அதிமுக சாா்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் எம்எல்ஏ-க்கள் அம்மன் கே.அா்ச்சுணன், கே.ஆா்.ஜெயராம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 12:11 am

கோவையில் அதிமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

அதிமுகவின் முப்பெரும் விழாவை முன்னிட்டு ஜெயலலிதா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. 64 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியை கோவை மாநகர மாவட்ட அதிமுக செயலரும் வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான அம்மன் கே.அா்ச்சுணன், கட்சியின் அம்மா பேரவை இணைச் செயலரும், சிங்காநல்லூா் தொகுதி எம்எல்ஏ-வுமான கே.ஆா்.ஜெயராம் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

முன்னதாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை அவா்கள் வழங்கினா். விழாவில் அதிமுக பகுதிச் செயலா் உலகநாதன், அதிமுக செய்தித் தொடா்பாளா்கள் கல்யாணசுந்தரம், மகேஸ்வரி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.