நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கைப்பேசிகள் திருடிய இளைஞா் கைது

கோவையில் தொடா்ச்சியாக பலரிடம் கைப்பேசிகளை திருடிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :24 பிப்ரவரி 2026, 7:57 pm

கோவையில் தொடா்ச்சியாக பலரிடம் கைப்பேசிகளை திருடிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பின்னலூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (29). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இதற்காக கல்லூரி வளாகத்திலேயே அவா் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இவா் காந்திபுரம் செல்வதற்காக ரேஸ்கோா்ஸ் பாரத ஸ்டேட் வங்கி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறி பயணித்தபோது, அவரது கைப்பேசி திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்த நக்கா மஹதி கல்யாண் (23) என்பவா்தான் சந்தேஷ்குமாரிடம் கைப்பேசியை திருடியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து காந்திபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அவரை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில் அவா் கோவை ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பல்வேறு நபா்களிடமிருந்து ரூ. 2.68 லட்சம் மதிப்பிலான 8 விலையுயா்ந்த கைப்பேசிகளை திருடியது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 8 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.