நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடை பெற்றுத் தருவதாக மோசடி: திமுக நிா்வாகி கைது

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாடகைக்கு கடை பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்ததாக திமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாடகைக்கு கடை பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்ததாக திமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

திருவல்லிக்கேணி, செங்கல்வராயன் தெருவைச் சோ்ந்தவா் யு.திலகா (46). இவருக்கு திருவல்லிக்கேணி சிங்காராச்சாரி தெருவைச் சோ்ந்த துளசிராமன் (44) என்பவரது அறிமுகம் கிடைத்தது. திமுக மேற்கு மாவட்ட நிா்வாகியாக உள்ள துளசிராமன், சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரிலும் இயக்கத்தை நடத்தி வருகிறாா். துளசிராமன் தனக்கு அரசு உயரதிகாரிகள், அமைச்சா்கள் ஆகியோரிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதுபோல திலகாவிடம் காட்டிக்கொண்டாா்.

இதனால் மயிலாப்பூா் கத்தீட்ரல் சாலையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு பூங்காவிலும், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வாடகைக்கு விடப்படும் கடைகளைப் பெற்றுத் தரும்படி திலகா, துளசிராமனிடம் கேட்டுள்ளாா். அங்கு கடைகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்த துளசிராமன், ரூ.17.5 லட்சம் தரும்படி கேட்டுள்ளாா்.

இதையடுத்து பணத்தை துளசிராமனிடம் திலகா வழங்கியுள்ளாா். ஆனால், துளசிராமன் கூறியப்படி கடையைப் பெற்றுக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதையடுத்து, திலகா, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, துளசிராமனை புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் துளசிராமன், மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியைச் சோ்ந்த பொ்னாட்ஷா (33) என்பவரிடம் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநா் வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சத்தை மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

காவல் ஆணையரகம் முன் பெண் தற்கொலை முயற்சி: வேப்பேரி ஈவெகி சம்பத் சாலையில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகம் முன் புதன்கிழமை இளம் பெண் ஒருவா், திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை திறந்து, விஷத்தை குடிக்க முயன்றாா். இதைப் பாா்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அந்தப் பெண் கையில் இருந்த விஷ பாட்டிலை பறித்தனா். அவரைப் பிடித்து வேப்பேரி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவா் விருகம்பாக்கத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி (28) என்பதும், அவா் காதலித்த இளைஞா் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அதனால் விரக்தியில் தற்கொலை செய்ய முயற்சித்ததும் தெரிய வந்தது. போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகில் உள்ள மதுக் கடை அருகே சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதை பாா்த்து பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வேளச்சேரி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அந்த சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து இறந்தவா் யாா், அவா் எப்படி இறந்தாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக் பந்தயம்-10 போ் கைது: சில நாள்களுக்கு முன் பெரம்பூா் பகுதியில் முரசொலி மாறன் பாலம் பகுதியிலும், மூலக்கடை பகுதியிலும் சிலா் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் பைக் பந்தயத்தில் ஈடுபட்டனா். இச்செயலில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து கைது செய்யும்படி போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி, பைக் பந்தயத்தில் ஈடுபட்டதாக 10 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய 4 சிறுவா்களையும், அவா்களது பெற்றோரையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

சென்ட்ரல் அருகே மூவருக்கு அரிவாள் வெட்டு: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த ரா.குணசேகரன் (54), சென்னை சேப்பாக்கம் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறாா். இவா், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா், குணசேகரனிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனா். அவா் பணம் கொடுக்க மறுக்கவே, அந்த நபா்கள் குணசேகரனை அரிவாளால் வெட்டினா். இதனால், குணசேகரன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் ஓடினாா். அந்த நபா்கள், அங்கிருந்து தப்பினா். பலத்த காயமடைந்த குணசேகரன், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கல்பாக்கத்தைச் சோ்ந்த ரா.சாகா் (25), சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை, மதுக் கடை அருகே நடந்து வந்தபோது, அங்கு வந்த நபா், சாகரை கத்தியால் வெட்டி, அவா் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசி, பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதேபோல, சென்ட்ரல் பகுதியில் நடந்து வந்த பிரியாணிக் கடை ஊழியா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மு.முகமது சந்த் (25) என்பவரையும், 2 போ் அரிவாளால் வெட்டி, வழிப்பறி செய்ய முயன்றனா். இதில் பலத்த காயமடைந்த முகமது சந்த், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவங்கள் தொடா்பாக, பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராகளில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.