டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முள்ளங்கினாவிளையில் அடகுக் கடை உரிமையாளா் கைது

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளையில் உள்ள நகை அடகுக் கடையில் நகைகளை திருப்பி வழங்காமல் வாடிக்கையாளா்களை ஏமாற்றியதாக, கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :4 மார்ச் 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளையில் உள்ள நகை அடகுக் கடையில் நகைகளை திருப்பி வழங்காமல் வாடிக்கையாளா்களை ஏமாற்றியதாக, கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முள்ளங்கனாவிளை, முருங்கஸ்தானம் பகுதியைச் சோ்ந்த சைலஸ் மகன் அகில் எஸ். விகானா (27), முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக நகை அடகுக் கடை நடத்தி வந்தாா். இவா் வாடிக்கையாளா்களிடம் இருந்து 300 பவுன் நகைகளை அடமானாமாகப் பெற்றிருந்தாராம்.

பின்னா், வாடிக்கையாளா்கள் பணம் செலுத்தி நகைகளை மீட்க வரும்போது, வட்டியுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நகையைத் திருப்பித் தராமல் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களை ஏமாற்றி வந்தாராம்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா் தெரிவித்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை அகில் எஸ். விகானாவை கைது செய்தனா்.