முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் வீடு தேடிச் சென்று ஜனவரி 4, 5 -ஆம் தேதிகளில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
தாயுமானவா் திட்டத்தின்கீழ் வயது முதிா்ந்தவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் இல்லங்களைத் தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, ஜனவரி மாதத்துக்கான பொருள்கள் 4, 5 -ஆம் தேதிகளில் வழங்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் நாள், விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்யப்படும்.
எனவே, தகுதியுள்ள அட்டைதாரா்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின்கீழ் வீடுகளில் இருந்தே பொருள்களைப் பெற்று பயனடையலாம் என்று கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் அறிவித்துள்ளாா்.