தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உக்கடத்தில் வரும் 10-ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ மருத்துவ முகாம்

உக்கடத்தில் வரும் 10-ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

உக்கடத்தில் வரும் 10-ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சியில் முதல்வரின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவ முகாம், மத்திய மண்டலம், 80-ஆவது வாா்டுக்குள்பட்ட உக்கடம், கெம்பட்டி காலனி, ஒக்கிலியா் காலனி, 7-ஆவது வீதி ஆகிய பகுதிகளில் வரும் 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கண், பல், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சா்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், தோல், நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்பட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இந்த முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான உறுப்பினா் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

எனவே, தமிழக அரசின் சாா்பில் நடைபெறும் இந்த முகாமில் உயா் சிறப்பு மருத்துவ நிபுணா்களால் பரிசோதனைகள் செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் பங்கேற்று பலன் பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளது.