எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், இரண்டு குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.
Published on

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், இரண்டு குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதிக்குள்

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமாக வந்த காட்டு யானைகள் இரண்டாவது டிவிஷன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றன.

அங்குள்ள குடியிருப்புகளின் ஜன்னல், கதவுகளை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களை கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

யானைகள் வந்திருப்பதை அறிந்த தொழிலாளா்கள் குடியிருப்புகளை விட்டு முன்கூட்டியே வெளியேறினா். அப்பகுதியினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா். இச்சம்பவத்தில் ராதா, ராஜேஸ்வரி ஆகிய தொழிலாளா்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

Dinamani
www.dinamani.com