சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என்று பாஜக தேசிய செயலரும், தமிழக பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் தெரிவித்தாா்.
கோவை மாநகராட்சி, மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் 1.2 கிலோ மீட்டா் நீள மேம்பாலப் பணிகளை பாஜக தேசிய செயலா் அரவிந்த் மேனன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேம்பாலப் பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்தும், இப்பணிகள் எப்போது முடிக்கப்படும் என்பது குறித்தும் கேட்டறிந்தாா்.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இங்கு நடைபெற்றுவரும் மேம்பாலப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும்போது, அதன் பெயா் மாற்றம் செய்யப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் 3 வயது பெண் குழந்தைகூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் நிலை நிலவுகிறது. மின் துறை உள்பட பல்வேறு துறைகளிலும் பலதரப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. இதுபோன்ற மக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளை மக்கள் மத்தியில் பாஜக கொண்டு செல்லும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு ஸ்டிக்கா் ஒட்டி தருகிறது: பாஜக

ராமா் கோயிலில் மகா கொள்ளை: பெரும் அரக்கா்களுக்கு தொடா்பு - அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

பாா் உரிமையாளரை மிரட்டிய மூவா் கைது

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகள் ஜூன் இறுதிக்குள் முடிக்கப்படும்: அமைச்சா் வி.சம்பத்குமாா்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



