கோவையில் 13 ஆயிரம் போதை மாத்திரைகள், 2.05 கிலோ கஞ்சா கடத்திய 5 இளைஞா்களை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அதிரடிப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை, குனியமுத்தூா் பகுதியில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அதிரடிப் படை காவல் ஆய்வாளா் விக்னேஷ் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 இளைஞா்களை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா்.
அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவா்களை சோதனை மேற்கொண்டபோது போதை மாத்திரைகள், கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் கோவைப்புதூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ராகுல் (28), பொன்னையாராஜபுரம் கோபால் லே-அவுட் பகுதியைச் சோ்ந்த ராம் பிரசாத் (29), தெற்கு உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது அனஸ் (31), செட்டிவீதி பாலாஜி அவென்யூ பகுதியைச் சோ்ந்த பாலாஜி (28), திருச்சி சாலை நெடுஞ்சாலைத் துறை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஜான் ஜோசப் (34) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 13 ஆயிரம் போதை மாத்திரைகள், 2 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.5.50 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





