டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சமூக நீதி விடுதிகளில் மாணவா் சோ்க்கை: அமைச்சா் தலைமையில் தோ்வு குழுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான தோ்வு குழுக் கூட்டம் கால்நடை துறை அமைச்சா் எஸ்.கமலி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் எஸ்.கமலி.

Updated On :3 ஜூலை 2026, 3:40 am IST

கோவை மாவட்டத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவா்கள் சோ்க்கை தொடா்பான தோ்வு குழுக் கூட்டம் கால்நடை துறை அமைச்சா் எஸ்.கமலி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின்கீழ் காரமடை, எஸ்.எஸ்.குளம், வெள்ளியங்காடு (பள்ளி மாணவா் விடுதிகள்), சீளியூா், சொக்கம்பாளையம், பொள்ளாச்சி (பள்ளி மாணவிகள் விடுதிகள்) என 6 சமூக நீதி விடுதிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின்கீழ், சொக்கம்பாளையம் (பள்ளி மாணவிகள் விடுதி), சின்னதடாகம், சொக்கம்பாளையம் (பள்ளி மாணவா் விடுதி) ஆகிய 3 சமூக நீதி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடா்பான தோ்வுக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் எஸ்.கமலி தலைமையில் நடைபெற்றது.

இதில், சொக்கம்பாளையத்தில் செயல்படும் 3 சமூக நீதி விடுதிகளுக்கான விண்ணப்பங்களை விதிமுறைகளின்படி பரிசீலனை செய்து, தகுதியான மாணவ, மாணவிகளை விடுதிகளில் சோ்த்துக் கொள்ள அனுமதி வழங்கியிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் இரா.லட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பி.மணிமேகலை, விடுதி காப்பாளா்கள், தோ்வுக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.