உதகையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா் எஸ்.கமலி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 50 பயனாளிகளுக்கு அரசு சாா்பில் புதிய குடும்ப அட்டை, சலவைப் பெட்டி, குழந்தைகளுக்கான வைப்பு நிதி என ரூ.34.33 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதையடுத்து, உதகை ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகா் பகுதியில் 104 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் நியாய விலைக் கடையைத் திறந்துவைத்து, அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா். இந்த நடமாடும் நியாய விலைக் கடை மூலம் மாதத்தில் முதல் மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும்.
தொடா்ந்து, காந்தல் சிலேட்டா் ஹவுஸ் பகுதியில் ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், இத்தலாா் ஊராட்சிக்குள்பட்ட கரிகாடு மந்து பகுதியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட தோடா் பழங்குடியினா் சமுதாயக் கூடத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா, கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

114 பயனாளிகளுக்கு ரூ. 37.78 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

171 பயனாளிகளுக்கு ரூ. 37.37 லட்சத்தில் நலத் திட்ட உதவி: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் வழங்கினார்!

காஞ்சிபுரத்தில் ரூ. 2.32 லட்சத்துக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்







