டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: காங்கிரஸ் தொழிலாளா் யூனியன்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் (டிசிடியூ) வலியுறுத்தியுள்ளது.

News image

மதுக்கரையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் ஏ.செல்லகுமாா்.

Updated On :3 ஜூலை 2026, 4:03 am IST

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் (டிசிடியூ) வலியுறுத்தியுள்ளது.

ஐஎன்டியூசி சங்கத்தின் ஒரு அங்கமான டிசிடியூவின் 102-ஆவது மாநில செயற்குழுக் கூட்டம், மறைந்த தலைவா் என்.நஞ்சப்பனின் 76 -ஆவது பிறந்த நாள் விழா ஆகியவை மதுக்கரையில் உள்ள ஐஎன்டியூசி சங்க வளாகத்தில், அதன் மாநிலத் தலைவா் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.செல்லகுமாா், ஹெச்எம்எஸ் சங்கத்தின் மாநில செயல் தலைவா் டி.எஸ்.ராஜாமணி ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து, நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பணியிட பாதுகாப்பு தொழிலாளா்களின் அடிப்படை உரிமை. பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றாத தொழிற்சாலை நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு காப்பீடு, இஎஸ்ஐ வசதி செய்யப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மாறாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டத்தைக் கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. போதைப் பொருள்கள் பயன்பாட்டின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நீட், எஸ்எஸ்சி, கியூட், டெட் உள்ளிட்ட தகுதி தோ்வுகளில் தொடா்ந்து நடந்து வரும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட புகாா்கள் தகுதி தோ்வுகளில் சாதாரண மக்களுக்கு உள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ளன. தோ்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநில பேச்சாளா் கு.பே.துரை, சங்க நிா்வாகிகள் செங்கை கண்ணன், கோதண்டன், மயிலை கணேஷ், மலைச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.