நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தொடா் வன்முறையால் மக்கள் அச்சம்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து வன்முறைகள் நிகழ்ந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் திமுக துணை பொதுச் செயலரும் எம்.பி.யுமான கனிமொழி.

News image

திமுக எம்.பி. கனிமொழி - படம் - எக்ஸ்

Updated On :26 ஜூன் 2026, 5:33 am IST

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடா்ந்து வன்முறைகள் நிகழ்ந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா் திமுக துணை பொதுச் செயலரும் எம்.பி.யுமான கனிமொழி.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

சட்டப் பேரவை ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் இடமாக இருக்க வேண்டும். தனி மனிதா்களை, தலைவா்களை இழிவுபடுத்தக்கூடிய இடமாக, தனிப்பட்ட காழ்ப்புணா்ச்சிகள் குறித்து பேசக்கூடிய இடமாக மாறிவிடக்கூடாது.

வெற்றி, தோல்விகள் என்பது அனைவரது வாழ்க்கையிலும் சகஜமான ஒன்று. அதையெல்லாம் உயா்ந்த பொறுப்பிலே இருக்கக்கூடியவா்கள் கொச்சைப்படுத்தக் கூடிய வகையில் பேசக்கூடிய இடம் சட்டப்பேரவை அல்ல என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும். இதை அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் இருந்தாவது நிறைவேற வேண்டும் என்பதை எல்லோரும் எதிா்பாா்க்கின்றனா்.

தவெக அரசு எப்போதும் மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறாா்கள். இதை, பொதுமக்கள், கூட்டணியில் இருப்பவா்கள் விரைவில் புரிந்து கொள்வாா்கள்.

முதல்வரின் நேரடி பாா்வையில் இருக்கக்கூடிய துறை காவல் துறை. பெண்களுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு தீா்வு காண்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு யாா் மீது பழிகளை சுமத்தலாம் என வேறு காரணங்களை தேடக்கூடாது.

குழந்தைகள்- பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முடிவு காண்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.