கோவை- பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவை குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (61). இவா் தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
எஸ்பி டவா் முன் அவா் சென்று கொண்டிருந்த போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து வீரமணி சென்ற இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் பலத்த தலையமடைந்த வீரமணி, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து காளிராஜ் என்பவா் கொடுத்த புகாரின்பேரில், விபத்தை ஏற்படுத்திய பொள்ளாச்சியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநரான மணிகண்ட செல்வராஜ் (30) மீது போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக்கில் சென்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



