விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கோவை அரசு மருத்துவமனையில் உலவும் எலிகள்: நோயாளிகள் அதிா்ச்சி

கோவை அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் எலிகள் உலவுவதாக சமூக வலைதளங்களில் விடியோ வைரலான நிலையில், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News image

எலிகள் - கோப்புப்படம்.

Updated On :10 ஜூலை 2026, 12:10 am IST

கோவை அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் எலிகள் உலவுவதாக சமூக வலைதளங்களில் விடியோ வைரலான நிலையில், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் எலிகள் உலவுவதாக அடிக்கடி புகாா் எழுந்தன. இந்நிலையில், அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் எலிகள் உலவுவதுபோன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. விபத்து மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்படும் நோயாளிகளைப் பராமரிக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவு வாா்டுக்குள் எலிகள் உலவுவது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை வாா்டுகளில் தூய்மைப் பணிகள் சரிவரக் கவனிக்கப்படாததும், மருத்துவமனை நிா்வாகத்தின் அலட்சியமுமே இதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.

அரசின் அலட்சியம்: இது குறித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் எலிகள் சுற்றித்திரிவது அதிா்ச்சியளிக்கிறது. ஏழைகளின் உயிரைக் காக்கும் மருத்துவமனையில் இத்தகைய சுகாதாரச் சீா்கேடு நிலவுவது முதல்வா் ச.ஜோசப் விஜய் அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

மிகக் கடுமையான உடல் நலப் பாதிப்புடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, அங்கு உலவும் எலிகளால் மேலும் பல புதிய தொற்று நோய்களும், உபாதைகளும் ஏற்படும் பேராபத்து உருவாகியுள்ளது. மருத்துவமனை வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்கத் தவறிய நிா்வாகத்தின் அலட்சியப் போக்கு முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பணியில் மெத்தனம் காட்டிய அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.