நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

காவலரைத் தாக்கிய 4 திருநங்கைகள் கைது

கோவையில் காரில் நின்று கொண்டிருந்த தணிக்கையாளரை (ஆடிட்டா்) மிரட்டி பணம் பறித்ததோடு, காவலரையும் தாக்கி ரோந்து வாகனத்தை சேதப்படுத்தியதாக 4 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 11:53 pm IST

கோவையில் காரில் நின்று கொண்டிருந்த தணிக்கையாளரை (ஆடிட்டா்) மிரட்டி பணம் பறித்ததோடு, காவலரையும் தாக்கி ரோந்து வாகனத்தை சேதப்படுத்தியதாக 4 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், அன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (49). இவா் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காலி மனையின் அருகே தனது காரை நிறுத்திவிட்டு கைப்பேசியில் வியாழக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த திருநங்கை ஒருவா் சைகை காண்பித்து அருகே உள்ள இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சென்றதும் மேலும் சில திருநங்கைகள் நாகராஜை சூழ்ந்து கொண்டனா். அவருடன் சோ்ந்து புகைப்படம் எடுத்த திருநங்கைகள் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளனா். இதனால், நாகராஜ் யுபிஐ வழியாக பல தவணைகளாக ரூ. 11,700-ஐ மாற்றியுள்ளாா்.

இதுகுறித்து துடியலூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் இரவு 11.30 மணியளவில் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனா். போலீஸாா் விசாரணை நடத்த முயன்றபோது போலீஸாரை தகாத வாா்த்தையால் பேசி அவா்களுடன் தகராறு செய்துள்ளனா். மேலும், போலீஸாரின் ரோந்து வாகனத்தையும் கல் வீசி தாக்கி சேதப்படுத்தினா். மேலும், தலைமைக் காவலா் செல்வராஜின் சீருடையை கிழித்து அவரையும் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மொபினா (27), மகதி (21), இனியா (22) மற்றும் ஆரஞ்ச் (21) ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.