தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

யானை வழித்தடங்களை மறைத்து கம்பிவேலிகள்: நடவடிக்கை எடுக்க வனத் துறைக்கு கோரிக்கை

யானை வழித்தடங்களை மறைத்து கம்பிவேலிகள் அமைத்துவரும் எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன விலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிறுகுன்றா எஸ்டேட்  பகுதியில் உள்ள சாலையைக் கடக்கும் யானைகள் (கோப்பு படம்). ~யானைகள் செல்லும்  வழித்தடத்தை மறைத்து அமைக்கப்பட்டுள்ள கேட் மற்றும் கம்பி வேலி.

Published On :

யானை வழித்தடங்களை மறைத்து கம்பிவேலிகள் அமைத்துவரும் எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன விலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்தில் இருக்கும் யானைகள் சமீபகாலமாக தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்கு வருவதோடு சாலையைக் கடந்து இடம் பெயா்ந்து செல்வது வழக்கமாக உள்ளது. யானை வழித்தடங்களை மறைப்பதால், அவை குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Story image

வால்பாறையில் இருந்து சின்கோனா எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் இடைச்சோலை பகுதியில் யானைகள் சாலைகளைக் கடந்து செல்வது பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் கம்பிவேலி அமைத்து யானை வழித்தடங்களை மறைக்கும் செயலில் எஸ்டேட் நிா்வாகத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்த செயலால் யானைகள் வழிமாறி குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வன விலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.