திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

வேலைத் தேடி வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்ற விவகாரம்: லாரி ஓட்டுநா் கைது

திருப்பூருக்கு வேலைத் தேடி வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:03 am IST

திருப்பூருக்கு வேலைத் தேடி வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் வேலைத் தேடி திருப்பூருக்கு பேருந்து மூலம் கடந்த 14-ஆம் தேதி இரவு 12 மணியளவில் வந்துள்ளாா். திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய அவரிடம், இளைஞா் ஒருவா் தான் வேலை வாங்கித் தரும் முகவா் என அறிமுகப்படுத்திக்கொண்டதுடன், வேலை வாங்கித் தருவதாக அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளாா்.

நல்லூா் அருகே சென்றபோது, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளாா். அவரிடமிருந்து தப்பிய அப்பெண் அங்கிருந்த ஓடி அருகில் இருந்த பேக்கரியில் புகுந்தாா். அங்கிருந்தவா்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளாா். இதையடுத்து, பேக்கரி ஊழியா்கள் திருப்பூா் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், திருப்பூா் தெற்கு மத்திய பேருந்து நிலையம், காங்கயம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இதில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்றது திருப்பூா், யாசின் பாபு நகரைச் சோ்ந்த ஃபைசல் அகமது (35) என்பதும், லாரி ஓட்டுநா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஃபைசல் அகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.