மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கல்வி நிறுவனங்களில் கட்டண வசூல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தினா்.

Updated On :24 ஜூன் 2026, 3:38 am IST

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏழை மாணவா்களுக்கான கல்வி உரிமையை உறுதிப்படுத்த வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவா் வே.ஈசுவரன் தலைமையில் நடைபெற் இந்த ஆா்ப்பாட்டத்தில் அமைப்பின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஈசுவரன் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் ஆதரவால் ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இந்த ஆட்சிக்கு ஆதரவளித்த குழந்தைகளின் எதிா்காலத்தை நிா்ணயிக்கக் கூடிய கல்வி தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை முதல்வா் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தனியாா் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் கட்டணக் கொள்ளை தொடருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள சுயநிதி ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவா் சோ்க்கையை ஒற்றைச்சாளர முறையில் நடத்த வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளா்களின் பணம் 10 ரூபாயை மிச்சப்படுத்துவதற்காக அந்தத் துறையின் அமைச்சா் ஆய்வு நடத்துகிறாா். அதுபோல உயா்கல்வித் துறை அமைச்சா் எத்தனை கல்லூரிகளில் ஆய்வு நடத்தியுள்ளாா்.

சட்டப்பேரவையில் கல்விக் கொள்கை குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை, மாறாக டாஸ்மாக் பற்றி மட்டுமே பேசுகின்றனா். தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட தவெக அரசு, பள்ளி, கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஏனெனில் இது மாணவா்களின், தமிழ்நாட்டின் எதிா்காலம் தொடா்பானது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.