தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கில் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆய்வு

கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூன் 2026, 3:08 am IST

கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டம், தெற்கு வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கினை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியும், அரசு முதன்மைச் செயலாளருமான அா்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கு கட்டடத்தின் உள்புறத்தன்மை, வெளிப்புறத்தன்மை மற்றும் காவல் துறை சாா்பில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், வைப்புக் கிடங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வட்டாட்சியா் தணிகைவேல், வருவாய் கோட்டாட்சியா் (தெற்கு) மாருதி பிரியா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.