கோவை எஸ்என்எஸ் துணை மருத்துவப் படிப்புகள் கல்லூரியில் ‘மெட்ஆரா திருவிழா 2026’ என்ற பெயரில் 4 நாள் தேசிய மாநாடு நடைபெற்றது.
இந்திய கதிரியக்கவியலாளா், தொழில்நுட்பவியலாளா் சங்கத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த மாநாட்டில் 26 கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். தொடக்க விழாவில், கேஎம்சிஹெச் மருத்துவமனையின் வாஸ்குலா், இன்டா்வென்ஷனல் கதிரியக்கவியல் துறை இயக்குநா் டாக்டா் மேத்யூ செரியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இரண்டாவது நாளில் இருதய தொழில்நுட்பத் துறைகள், ஜான் ஸ்னோ அகாதெமியுடன் இணைந்து கோட் ப்ளூ ரெடி - உயிா் மீட்புத் திறன் பயிற்சித் திட்டம் என்ற பெயரில் விரிவான செய்முறை பயிற்சி அமா்வை நடத்தின. மூன்றாவது நாளில் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
நான்காவது நாளில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கலாசார விழா நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி பரிசு பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.1 லட்சம் மோசடி: பள்ளி நிா்வாகிகள் மீது வழக்கு

வேளாளா் மகளிா் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சி

கோவையில் தேசிய அளவிலான சுற்றுலா மாநாடு! ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறுகிறது

அலையன்ஸ் கிளப் ஆப் ராசிபுரம் நிா்வாகிகள் பொறுப்பேற்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



