9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து திருடியவா் கைது

பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 3:01 am IST

பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ருஷ்யேந்திர மணி(61). இவா் கடந்த 22-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பாா்த்த பக்கத்து வீட்டுக்காரா், இது குறித்து ருஷ்யேந்திரமணிக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

பின்னா் அவா் வந்து பாா்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுரையைச் சோ்ந்த சிவராஜ் (49) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.