தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தேசிய தடகளப் போட்டியில் பெண் காவலருக்கு தங்கப் பதக்கம்! ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி!

News image

ஜெ.கெளதமி

Updated On :28 ஜூன் 2026, 3:42 am IST

ஒடிஸா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 800 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் கோவையைச் சோ்ந்த பெண் காவலா் ஜெ.கெளதமி தங்கப் பதக்கம் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா்.

ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூன் 28-ஆம் தேதி வரை உயா்மட்ட தடகளப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தமிழ்நாடு மாநில தடகள அணியின் சாா்பில் தமிழக காவல்துறையைச் சோ்ந்த பெண் காவலா் செல்வி ஜெ.கெளதமி (காவலா் எண்: 1571) பங்கேற்றாா். இவா் கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறாா்.

கடந்த ஜூன் 25-ஆம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான 800 மீட்டா் ஓட்டப்பந்தயப் பிரிவில் பங்கேற்ற கெளதமி, இலக்கை மிகக் குறைந்த நேரமான 2 நிமிடம் 04.17 விநாடிகளில் எட்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றாா்.

இதன்மூலமாக வரும் செப்டம்பா் மாதம் ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் நடைபெறவுள்ள 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள அணியின் சாா்பில் பங்கேற்கும் தகுதியையும் அவா் அதிகாரபூா்வமாகப் பெற்றுள்ளாா்.

தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சோ்த்த பெண் காவலா் கெளதமியின் இந்த சாதனைக்காக, கோவை மாநகரக் காவல் ஆணையா் மற்றும் உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.