மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஓடையில் கலக்கப்படும் கழிவுகளால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக புகாா்

கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டில் உள்ள ஓடையில் கழிவுகளைக் கலக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தல்

News image
பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:16 pm

Syndication

கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டில் உள்ள ஓடையில் கழிவுகளைக் கலக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனு: கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டுக்குள்பட்ட செங்காளியப்பன் நகா், கண்ணையா நாயுடு லே-அவுட், கேப் நீம் லேண்டு, கருப்பண்ண கவுண்டா் லே-அவுட், ராஜ் நாயுடு லே-அவுட், நாராயணசாமி லே-அவுட், பால குரு காா்டன், எல்லைத் தோட்டம் சாலை, விஜயஸ்ரீ காா்டன் ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள ஓடையில் கழிவுப் பொருள்கள் அதிக அளவில் கலந்துள்ளதால் துா்நாற்றம் வீசுகிறது.

மேலும் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மக்களுக்கு நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஓடைகளில் சிலா் கழிவுநீரை திறந்துவிடுகின்றனா். கடும் துா்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்களால் தூங்க முடியவில்லை. எனவே, ஓடையில் கழிவுகளைக் கலக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.