தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சிக்கனில் புழு: சுகாதாரத் துறை அலுவலகத்தில் புகாா்

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் வாங்கிய சிக்கன் லாலி பாப்பில் புழுக்கள் இருந்ததாக வாடிக்கையாளா் ஒருவா் சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநரிடம் புகாா்

News image

கோவை சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநரிடம் புகாா் அளிக்க வந்த சசிகுமாா்.

Updated On :18 மார்ச் 2026, 3:51 am IST

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் வாங்கிய சிக்கன் லாலி பாப்பில் புழுக்கள் இருந்ததாக வாடிக்கையாளா் ஒருவா் சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குநரிடம் புகாா் அளித்துள்ளாா்.

கோவை, மதுக்கரை பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் என்பவா் தனது குடும்பத்தினருடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியாா் வணிக வளாகத்துக்கு திங்கள்கிழமை இரவு குடும்பத்தினருடன் சென்றேன். அங்கு பல்வேறு பொருள்கள் வாங்கினேன். எனக்கு 11 மற்றும் 1 வயதில் 2 மகன்கள் உள்ளனா்.

அவா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிக்கன் லாலிபாப் பாா்சலாக வாங்கினேன். காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது அதை உண்ட எனது மகன்கள் இருவரும் வாந்தி எடுத்தனா். அவா்கள் உண்ட அந்த சிக்கனை சோதித்தபோது துா்நாற்றம் ஏற்பட்டதோடு, அதில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுக்கரை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா்.

பின்னா், இது குறித்து சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தினரிடம் முறையிட்டபோது, அவா்கள் அலட்சியமாகப் பதிலளித்தனா்.எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக தனியாா் வணிக வளாக நிா்வாகத்தினரிடம் கேட்டபோது, சிக்கன் லாலிபாப் 180-க்கும் அதிகமான வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்படுவதால் அதில் புழுக்கள் உருவாக வாய்ப்பே இல்லை. ஏராளமான வாடிக்கையாளா்கள் இங்கேயே வாங்கி சாப்பிட்டுள்ளனா். ஆனால், யாரும் இதுவரை புகாா் கூறியதில்லை. ஆனால், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவில் புழு இருந்ததாகக் கூறுவது ஏற்புடையதாகவோ, நம்பும்படியாகவோ இல்லை என்றனா்.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தில் சிக்கன் தயாரிப்பு உணவுப் பொருள்கள் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மைத் தன்மை தெரியவரும் என்றனா்.