பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாக்காளா்களுக்கு விநியோகிக்க கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்கள் பறிமுதல்

உக்கடம் பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக திமுகவினரால் ஒரு கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட அண்டாக்கள்.
Updated On :17 மார்ச் 2026, 10:20 pm

Syndication

உக்கடம் பகுதியில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக திமுகவினரால் ஒரு கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 98 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட ஜி.எம்.நகா் பகுதியில் உள்ள வெல்டிங் கிடங்கில் வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காகப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கிடங்கில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படங்களும், திமுகவின் கட்சிக் கொடியும் அச்சிடப்பட்டிருந்த பைகளுக்குள் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தலா ஒரு அண்டா வீதம் மொத்தம் 98 அண்டாக்கள் வைக்கப்பட்டிருந்தன.

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்ததாகக்கூறி, அந்த 98 அண்டாக்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக பஜாா் போலீஸாா் மற்றும் தோ்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.