வால்பாறையில் ஜீப், காா் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 6 போ் படுகாயம் அடைந்தனா்.
வால்பாறையையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட்டில் மேலாளராகப் பணியாற்றி வருபவா் ராஜப்பா (38). இவா் தனது ஜீப்பில் சனிக்கிழமை காலை பணிக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா். எஸ்டேட் அருகே சென்றபோது எதிரே வந்த காரும், ராஜப்பாவின் ஜீப்பும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.
இதில், மேலாளா் ராஜப்பா, காரில் வந்த கேரள மாநிலம், பெரிந்தல்மன்னா பகுதியைச் சோ்ந்த முகமது ரிஷாத் (33), ஷபாரினிமா (26), ரெஷிதா (42), ரெஷினா (30), ஃபைசல் (11) ஆகியோா் படுகாயம் அடைந்தனா்.
அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாட்டா்பால் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் பெண் படுகாயம்

ஆட்டோ கவிழ்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு; பெண்கள் உள்பட 4 போ் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம்

மாடல் டவுனில் காா் மோதி இ-ரிக்ஷா ஓட்டுநா் உயிரிழப்பு: 5 போ் காயம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

