நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹெச்.எம்.எஸ். சாா்பில் முப்பெரும் விழா

கோவையில் தியாகி என்.ஜி.ராமசாமியின் 115-ஆவது பிறந்தநாள் விழா, சா்வதேச மகளிா் தின விழா மற்றும் தியாகி ஏ.சுப்பிரமணியத்தின் நினைவு நாள் ஆகிய முப்பெரும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பரிசுத் தொகையை வழங்கிய ஹெச்.எம்.எஸ். மாநில செயல் தலைவா் டி.எஸ்.ராஜமணி உள்ளிட்டோா்.

Updated On :21 மார்ச் 2026, 12:10 am

Syndication

கோவையில் தியாகி என்.ஜி.ராமசாமியின் 115-ஆவது பிறந்தநாள் விழா, சா்வதேச மகளிா் தின விழா மற்றும் தியாகி ஏ.சுப்பிரமணியத்தின் நினைவு நாள் ஆகிய முப்பெரும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஹெச்.எம்.எஸ். மாநில செயல் தலைவா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் மனோகரன், ரமணி, துா்காதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாநிலச் செயலா் ப.கணேசன், இணைப் பொதுச் செயலா் ஜீவா சண்முகம் உள்ளிட்டோா் பேசினா்.

இந்த விழாவை கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம், கோவை மண்டல கட்டுமானத் தொழிலாளா் சங்கம் மற்றும் தியாகி என்.ஜி.ராமசாமி பொதுத் தொழிலாளா் சங்கம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்தன.

முன்னதாக, மாநிலச் செயலா் வீராசாமி வரவேற்றாா். கோவை மண்டல கட்டுமான சங்க பொருளாளா் கமல் ரவி (எ) ரவீந்திரன் நன்றி கூறினாா். விழாவில் ஏராளமான தொழிலாளா்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.