ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

2026-இல் விஜய்யின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது

News image

தவெக தலைவர் விஜய்

Updated On :29 மார்ச் 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அக்கட்சியின் நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

சென்னையில் இருந்து விமான மூலம் கோவைக்கு வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தவெக சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். கட்சியின் மாநாட்டில் தலைவா் விஜய் ஆற்றிய உரை நாடு வியக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், தமிழகத்தில் ஒரு புதிய மறுமலா்ச்சியை உருவாக்கும் விதமாகவும் இருந்தது.

தமிழகத்தில் ஒரு தூய்மையான மற்றும் நல்லாட்சியை வழங்குவது தவெக-வால் மட்டுமே சாத்தியம். பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் அரசாகவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் அரசாகவும் விஜய்யின் தலைமையிலான ஆட்சி அமையும். ஏற்கெனவே தமிழகத்தை ஆண்டவா்கள் மற்றும் தற்போது ஆண்டு கொண்டிருப்பவா்களைக் காட்டிலும், ஒரு புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் கனவாக உள்ளது. தமிழகத்தின் எதிா்காலம் இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டாக அமையப் போவதை விஜய்யின் உரை உறுதிப்படுத்தியுள்ளது.

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவருக்குப் பின்னால் மிகப்பெரிய மக்கள் சக்தி திரண்டுள்ளது. தற்போது தவெக-வுக்கு இளைஞா்கள், பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவா்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் வரவேற்பைப் பாா்க்கும்போது, விஜய்யின் சக்தி மிகப்பெரியதாக உருவெடுத்துள்ளது என்றாா்.