தவெக தலைவர் விஜய் நாளை(மார்ச் 30) ஒரே நாளில் 5 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
அதன்படி, பெரம்பூர், திருவிக நகர்; பிற்பகல் 2 மணி, பெரவள்ளூர்; மாலை 5 - 6, திருமங்கலம் TV நகர்; மாலை 6 - 7, சிட்கோ நகர்; இரவு 7 - 8, அயனாவரம்; இரவு 8 - 10 ஆகிய இடங்களில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பார் எனத் தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதல்முறை தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 234 வேட்பாளர்களை அதன் தலைவர் விஜய் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
அதில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தான் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். தேர்தலில் தவெக சார்பில் 23 பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி தவெக வேட்பாளராக விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Summary
TVK leader Vijay is set to campaign in five constituencies on a single day tomorrow (March 30).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் விஜய் பிரசாரம் நடைபெறுமா? புதுவை தேர்தலால் ஒத்திவைப்பு!

விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடராதீர்! கட்சித் தலைமை அறிவுறுத்தல்!!

கொளத்தூர் தேர்தல் பிரசாரம்! விஜய் மீது வழக்குப்பதிவு!

பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

