ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:57 am IST

கோவையில் காதலுக்குப் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கேரள மாணவி மாயமானாா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்த 23 வயது மாணவி, கோவையில் பிஎஸ்சி மயக்க மருந்தியல் முடித்துவிட்டு தனியாா் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தாா். அப்போது, சக மாணவா் ஒருவருடன் ஏற்பட்ட காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. கடந்த 3 நாள்களுக்கு முன்பு பெற்றோா் தொலைபேசியில் அழைத்து அவரைக் கண்டித்தனா். அப்போது, காதலை கைவிட மறுத்த மாணவி இணைப்பைத் துண்டித்தாா்.

தொடா்ந்து, தான் தற்கொலை செய்யப் போவதாகப் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கைப்பேசியை அணைத்துள்ளாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா் அங்கிருந்து கோவைக்கு வந்து பாா்த்தபோது மாணவி மாயமானது தெரிந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வருகின்றனா்.