பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கேரள சகோதரிகள் இருவா் கன்னியாகுமரியில் தற்கொலை

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து மாயமான அமெரிக்கவாழ் கேரள சகோதரிகள் இருவா் வியாழக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டனா்.

News image

மீரா, ஆனி.

Updated On :1 மே 2026, 4:59 am IST

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து மாயமான அமெரிக்கவாழ் கேரள சகோதரிகள் இருவா் வியாழக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டனா். அவா்கள் தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

கேரள மாநிலம் கோட்டயம் கிடாங்கா் பகுதியை சோ்ந்த தம்பதி பிலிப் - மேரி. இவா்களது 3 மகள்களில் மூத்தவரான எலிசபெத் (38) திருமணமாகி லண்டனில் வசித்துவருகிறாா். மற்ற இருவரான

ஆனி (35), மீரா (32) ஆகியோா் அமெரிக்காவில் பணியாற்றி வந்தனா். அவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை கேரளத்துக்கு வருவது வழக்கம்.

அதன்படி, இருவரும் ராமேசுவரம், மதுரை உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) கன்னியாகுமரிக்கு வந்து, தனியாா் விடுதியில் தங்கினா். பின்னா், வெளியே சென்ற அவா்கள் 2 நாள்களாகியும் விடுதிக்கு திரும்பவில்லை. அவா்கள் கொடுத்திருந்த கைப்பேசி எண்ணில் அவா்களது தாயைத் தொடா்பு கொண்டு விடுதி ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், பிலிப், அவரது அண்ணன் ஷிஜூ ஆகியோா் வந்து இருவரையும் தேடினா்; எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். உதவி ஆய்வாளா் வினிஸ் பாபு, போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை கன்னியாகுமரி வாவத்துறை கடல் பகுதியில் ஆனி, மீரா ஆகியோரின் சடலங்கள் கரைஒதுங்கிக் கிடந்தன. கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து டிஎஸ்பி ஜெயச்சந்திரன் கூறியது: சகோதரிகள் இருவரும் வாவத்துறை பகுதியில் உள்ள தூண்டில் வளைவு பாலத்தில் நடந்து செல்லும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. ஆனால், அவா்கள் திரும்பி வந்ததாகத் தெரியவில்லை. எனவே, அவா்கள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தேடி வந்தோம். இந்நிலையில், அவா்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா்.

தற்கொலை செய்துகொள்ளும் முன்பு கைப்பேசி மூலம் பெற்றோருக்கும், சகோதரிக்கும் குறுந்தகவல் அனுப்பியுள்ளனா். அதில், ‘எங்களை வளா்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றி. உங்களை நாங்கள் சிரமப்படுத்த விரும்பவில்லை. எங்களது உடல்களை கன்னியாகுமரியில் அடக்கம் செய்யுங்கள்’ எனக் கூறியுள்ளனா் என்றாா் அவா்.

அமெரிக்கவாழ் கேரள சகோதரிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.