வடவள்ளி : கோவை அருகே நடத்தப்பட்ட அகழாய்வில் கீழடிக்கும் முந்தைய காலகட்ட கடல் சங்கு, மணிகள், குழி வீடுகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், பூலுவபட்டியை அடுத்த மோளப்பாளையம் கிராமம் மூலக்காடு பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் மற்றும் பண்டைய கால வரலாற்று துறைத் தலைவர் பேராசிரியர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் கடந்த 2021, 2024}ஆம் ஆண்டுகளில் 2 முறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். இதில் பல்வேறு கற்கால பொருள்கள் மற்றும் மனிதர்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பபட்டன.
இந்த நிலையில் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் 85 முதுகலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் இந்த பகுதியில் 3}ஆவது முறையாக அகழாய்வு பணிகளை 47 நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் கீழடிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த புதிய கற்கால பொருள்கள் மற்றும் 2 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பேராசிரியர் செல்வகுமார் கூறியதாவது:
மோளப்பாளையத்தில் உள்ள தொல்லியல் இடம் புதிய கற்கால மக்களின் வாழ்விடமாக அமைந்துள்ளது. கி.மு. 1600 முதல் கி.மு. 200}க்கு இடைப்பட்ட காலம் என்பது ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்து அமைந்து உள்ள இந்த இடத்தில் பல குழி வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
மேலும் குழியில் பானைகள் வைப்பதற்கான அடுக்குகளையும் உருவாக்கி உள்ளனர். தற்போது 2 குழந்தைகளின் முழு எலும்புக் கூடுகளையும் கண்டெடுத்து உள்ளோம். இத்துடன் மான், ஆமை, ஆடு, மாடு போன்றவற்றின் எலும்புகள் மற்றும் காண்டா மிருகத்தின் கால் எலும்பும் கிடைத்து உள்ளது. இந்தக் குழிகளில் அம்மி போன்ற அரவை கற்கள், தானியங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதில் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளைத் தயாரித்து உள்ளனர். விலங்குகளின் மாமிசமும் உணவாக அமைந்து உள்ளது. கற்கோடரிகளை உருவாக்கிய அவர்கள் கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது.
இந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட பொருள்கள் கீழடிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு! 4 போ் பலத்த காயம்!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

தோ்தல் விதிமீறல்: மாவட்டத்தில் இதுவரை ரூ.36.17 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்

ஈரான் போரால், எந்தெந்த பொருள்கள் ஏற்றுமதிக்கு பாதிப்பு?
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

