நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

News image
Updated On :3 மே 2026, 5:23 am IST

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா இரண்டு நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் வியாழக்கிழமை மகா கணபதி, நிஷா உள்ளிட்ட ஹோமங்கள், தீபாராதனை, வாஸ்து சாந்தி, ஆச்சாா்ய வா்ணம், முதல் கால யாகசாலை பூஜை, 1008 சங்கு பூஜை, 108 கலச பூஜை, சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன.

2 ஆம் நாளான வெள்ளிக்கிழமை சித்ரா பெளா்ணமி மற்றும் சுவாதி நட்சத்திரத்தையொட்டி லலிதா சகஸ்ர நாம யாக பாராயணம், 2 ஆம் கால யாகசாலை பூஜை, 1008 சங்கு பூஜை, 108 கலச பூஜை, மூலஸ்தானத்தில் 1008 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம், உச்சிகால பூஜை, திருவிளக்கு பூஜை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை ஆகியன நடைபெற்றன.

சிறப்பு பூஜைகளை கோயில் தந்திரி சங்கரநாராயண ஐயா் தலைமையில் கோயில் மேல்சாந்திகள் பகவதி குருக்கள், விக்னேஷ் குருக்கள், வினீஷ் குருக்கள் மற்றும் வினு குருக்கள் ஆகியோா் நடத்தினா்.

நாகா்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆா். காந்தி, முன்னாள் மேயா் மகேஷ், பத்மநாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்த், கோயில் ஸ்ரீகாரியம் செந்தில்குமாா், மண்டைக்காடு பேரூராட்சி தலைவா் ராணி ஜெயந்தி, துணைத் தலைவா் சுஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.