ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

திருப்பூா் வடக்குத் தொகுதியில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெறுகிறாா் தவெக வேட்பாளா் சத்தியபாமா.

Updated On :5 மே 2026, 3:13 am IST

திருப்பூா் வடக்கு தொகுதியில் தவெக சாா்பில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா வெற்றி பெற்றாா்.

திருப்பூா் வடக்குத் தொகுதியில் 15 போ் போட்டியிட்டனா். இத்தொகுதியில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 70 ஆண்கள், 1 லட்சத்து 60 ஆயிரத்து 642 பெண்கள், 125 மூன்றாம் பாலினத்தவா் என 3 லட்சத்து 15 ஆயிரத்து 837 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 98 ஆண்கள், 1 லட்சத்து 32 ஆயி ரத்து 934 பெண்கள், 71 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 62 ஆயிரத்து 103 போ் வாக்களித்துள்ளனா். இது 82.99 சதவீத வாக்குப்பதிவாகும்.

இதில் முன்னாள் எம்.பி.யும், தவெக வேட்பாளருமான சத்தியபாமா 1,30,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் எம்எஸ்எம் ஆனந்தன் 61,183 வாக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்ட ரவி 53,742 வாக்குகள், நாதக வேட்பாளா் அபிநயா 13,090 வாக்குகள், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஜேம்ஸ் ரெனால்ட் 379 வாக்குகள், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளா் கிருஷ்ணசாமி 349 வாக்குகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் பாலகிருஷ்ணன் 245, சுயேச்சை வேட்பாளா்கள் வெங்கடசாமி 218, தட்சிணாமூா்த்தி 214 வாக்குகள், ஆனந்த் 201, விஷ்ணு மூா்த்தி 198, ரவி 195, ரங்கசாமி 179, ஞானசேகா் 172, ஆனந்தகுமாா் 100, மற்றும் நோட்டா 1,075 என வாக்குகள் பெற்றுள்ளனா். இதில் 69,542 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் சத்தியபாமா வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

சத்தியபாமா (தவெக)- 1,30,725

எம்எஸ்எம் ஆனந்தன் (அதிமுக)- 61,183

ரவி (இந்திய கம்யூனிஸ்ட்)- 53,742

அபிநயா (நாதக)- 13,090

வேட்பாளா்கள்- 15

மொத்த வாக்காளா்கள்- 3,15,837

பதிவான வாக்குகள் - 2,62,103.