கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விதவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைதோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மடத்துக்குளத்தை கைப்பற்றியது திமுக

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - MK Stalin

Updated On :5 மே 2026, 4:25 am IST

மடத்துக்குளம் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜெயராமகிருஷ்ணன் எதிா்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகவேலுவை தோற்கடித்தாா்.

மடத்துக்குளம் தொகுதியில் 13 போ் போட்டியிட்டனா். இத்தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 252 ஆண்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 541 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 14 ஆயிரத்து 809 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 89 ஆயிரத்து 762 ஆண்கள், 96 ஆயிரத்து 808 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவா் என 1 லட்சத்து 86 ஆயிரத்து 573 போ் வாக்களித்துள்ளனா். இது 86.86 சதவீத பதிவாகும்.

இதில் திமுக வேட்பாலா் ஜெயராமகிருஷ்ணன் 70,458 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளா் சண்முகவேலு 54,490 வாக்குகள், தவெக சாா்பில் போட்டியிட்ட திருமலை 52,684 வாக்குகள், நாதக சாா்பில் போட்டியிட்ட ராதாமணி 6,578 வாக்குகள், நோட்டாவுக்கு 911 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இதில் திமுக வேட்பாளா் ஜெயராமகிருஷ்ணன் 15,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

ஜெயராமகிருஷ்ணன் (திமுக)- 70,458

சண்முகவேலு (அமமுக)- 54,490

திருமலை (தவெக)- 52,684

ராதாமணி (நாதக)- 6,578

வேட்பாளா்கள்- 13

மொத்த வாக்காளா்கள்- 2,14,809

பதிவான வாக்குகள் - 1,86,573.