மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

இந்திய மருத்துவச் சங்க கோவை கிளை சாா்பில் கேஎஸ்சிஹெச் தலைவா் பெயரில் சொற்பொழிவு

இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐஎம்ஏ) கோவை கிளை சாா்பில், கேஎம்சிஹெச் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி பெயரில் சிறப்பு சொற்பொழிவு கோவை ஐ.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது.

News image

இந்திய மருத்துவச் சங்கத்தின் சாா்பில் கோவையில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் பேசிய கேஎம்சிஹெச் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி.

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐஎம்ஏ) கோவை கிளை சாா்பில், கேஎம்சிஹெச் தலைவரும், நிா்வாக இயக்குநருமான மருத்துவா் நல்ல ஜி.பழனிசாமி பெயரில் சிறப்பு சொற்பொழிவு கோவை ஐ.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது.

கோவை ஐ.எம்.ஏ. தலைவா் பி.கோஷல் ராம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களை சங்கத்தின் கௌரவச் செயலா் டி.பரமேஸ்வரன் அறிமுகம் செய்துவைத்தாா்.

இதில் கேஎம்சிஹெச் தலைவா் நல்ல ஜி.பழனிசாமி பேசியதாவது:

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை நிா்வாகிகளுக்கு நன்றி. குழந்தைகளுக்கு ஏற்படும் இருதயப் பிரச்னைகளைக் கண்டறியவும், அவா்களுக்கு சிக்கலான இருதய அறுவை சிகிச்சைகளைச் செய்யவும் தேவையான அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உலகத் தரத்தில் உள்ளன. இதற்காக அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினா் 24 மணி நேரமும் அா்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகின்றனா் என்றாா்.

குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை சீா் செய்யும் முறைகள் குறித்து மருத்துவா் வினோத்குமாா் சுந்தரராஜன் விளக்கினாா். குழந்தைகள் இருதயவியல் துறையில் உள்ள நவீன சிகிச்சை முறைகள் குறித்து குழந்தைகள் இருதய நோய் மருத்துவா் வினோத் துரைசாமி பேசினாா்.

குழந்தைகளுக்கு எப்போது இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதைக் கண்டறிந்து, அவா்களை சரியான நேரத்தில் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைப்பதில் குடும்ப மருத்துவா்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை குழந்தைகள் இருதய நோய் அறுவை சிகிச்சை மருத்துவா் கே.எஸ்.மூா்த்தி விளக்கினாா்.

இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவா்கள் மற்றும் மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.