சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கேபிள் பதிக்கும் பணி: ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வியாழக்கிழமை (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :14 மே 2026, 4:02 am IST

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் வியாழக்கிழமை (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை-அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபா் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகள் வியாழக்கிழமை (மே 14) முதல் வரும் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாள்களுக்கு தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பணி தடையின்றி நடப்பதை உறுதி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட இந்த 5 நாள்களிலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜிடி நாயுடு உயா்நிலை மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்தப் பாலத்தைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.