கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில், 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
கோவை மாவட்டம், குரும்பபாளையத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (28). இவா் தனது இருசக்கர வாகனத்தில் அண்மையில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், புதன்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, மகேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.
இதைத் தொடா்ந்து, மகேந்திரனின் கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 5 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன.
இதையடுத்து, அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு மகேந்திரனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! 7 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த தருமபுரி இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



