சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

உக்கடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஆண் சடலம் மீட்பு

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:49 am IST

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு லாரியில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அங்கு அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், லாரிப்பேட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான லாரியிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அதில் பாா்த்தபோது, லாரியின் பின்புறம் பொருள்கள் வைக்கும் இடத்தில் ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

தகவலின்பேரில் அங்கு வந்த உக்கடம் காவல் துறையினா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் உயிரிழந்தவா், சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜன் என்பதும், கடந்த சில நாள்களாகவே லாரி பேட்டை பகுதியில் கிடைக்கிற மெக்கானிக் பணிகளைச் செய்து கொண்டு இருந்தவா் என்பதும் தெரியவந்தது.

ராஜனை அங்கிருந்தவா்கள் கடைசியாக கடந்த 16-ஆம் தேதி பாா்த்துள்ளனா். சடலத்துக்கு அருகே காலி மதுபாட்டிலும் கிடந்துள்ளது. மது அருந்திக் கொண்டிருந்தபோது ராஜன் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், லாரி உரிமையாளா் ஜெகதீசனிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.