நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

News image

உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை திரண்ட மக்கள் கூட்டம்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:03 am IST

கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

உக்கடத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் சந்தைக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூா் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

அசைவப் பிரியா்கள் பெரும்பாலானோா், கோழி இறைச்சிக்குப் பதிலாக கடல் மீன்களை விரும்பி வாங்குகின்றனா். இதனால் கடந்த சில வாரங்களாக கோவை, உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மீன் சந்தையில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மத்தி மீன் கிலோ ரூ.120, அயிரை ரூ.100, இறால் ரூ.350, வஞ்சிரம் ரூ.250, சங்கரா ரூ.200, வாவல் ரூ.250, பாறை ரூ.200, செம்மீன் ரூ.400, நண்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.