தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

கோவையில் மருத்துவ ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 9 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 3:50 am IST

கோவையில் மருத்துவ ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 9 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, வெள்ளலூா் நேதாஜி வீதியைச் சோ்ந்தவா் வி.பி.தியாகராஜன் (45). இவரது மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு மருத்துவப் படிப்புக்காக ‘நீட்’ தோ்வு எழுதியிருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளலூா் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் ரஜினிகாந்த் மூலமாக, போத்தனூா் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா் (33) அறிமுகமாகியுள்ளாா். தான் மருத்துவத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் சலுகைக் கட்டணத்தில் மருத்துவ ‘சீட்’ வாங்கித் தர முடியும் என்றும் தியாகராஜனிடம் செல்வகுமாா் கூறியுள்ளாா்.

இதையடுத்து, தியாகராஜன் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.9 லட்சத்தை செல்வகுமாரிடம் கொடுத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா் கல்லூரி நிா்வாகத்தின் பெயரில் போலி ரசீதுகள் மற்றும் போலி சோ்க்கை ஆணை ஆகியவற்றை வழங்கியுள்ளாா். இந்த ஆவணங்களைக் கொண்டு தியாகராஜன் வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, ஓராண்டு கடந்தும் மாணவிக்கு மருத்துவ ‘சீட்’ கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த தியாகராஜன் போத்தனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ரஜினிகாந்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.