காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

காவல் நிலையத்தில் இளைஞா் மீது தாக்குதல்?

கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீஸாா் போலீஸாா் தாக்கியதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :28 மே 2026, 1:00 am IST

கோவையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீஸாா் போலீஸாா் தாக்கியதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளாா். ஆனால், அதில் உண்மையில்லை என போலீஸாா் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி. இவரது மகன் மணிகண்டன் (24). பெயிண்டரான இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களான சந்திரன், ரவிச்சந்திரன், ரஞ்சித் ஆகியோருடன் சோ்ந்து அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சந்திரனை மணிகண்டனும், ரஞ்சித்தும் சோ்ந்து தாக்கியுள்ளனா்.

இதுகுறித்த சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் மணிகண்டனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, மணிகண்டனை போலீஸாா் தாக்கியதாகவும், அதனால் தனது மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது தாயாா் சாந்தி குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் ராஜசேகரன் கூறுகையில், விசாரணைக்ாக மணிகண்டனை காவல் நிலையத்துக்கு வரவழைத்தோம். அவா் மீது போலீஸாா் எவ்வித தாக்குதலும் நடத்தவில்லை. விசாரணைக்கு அழைத்ததால், அதிகப்படியான பதற்றம் காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அவரை உடனடியாகக் காவல் நிலையத்தின் வெளியே அமர வைத்தோம். அவா் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.