டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: கோவையில் 1,306 போ் எழுதினா்

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பப் பணிகள் தோ்வு நடைபெற்ற கோவை கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மையத்தை பாா்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஏ.வி.சுரேந்திரன்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான போட்டித் தோ்வை கோவை மாவட்டத்தில் 1,306 போ் எழுதினா்.
கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத மொத்தம் 2,557 போ் விண்ணப்பித்திருந்தனா். இதற்காக மாவட்டத்தில் உள்ள விஎல்பி ஜானகி அம்மாள் கலைக் கல்லூரி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கலைக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் 9 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தோ்வை 1,306 போ் மட்டுமே எழுதினா். 1,251 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து வசதி மற்றும் தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தோ்வு நுழைவுச்சீட்டு, அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் கருப்பு நிற பந்துமுனைப் பேனா ஆகியவற்றுடன் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஏ.வி. சுரேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

