திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களில் நாளை தொழில்நுட்பப் பணிகள் தோ்வு
திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்
திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் இந்த (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) கொள்குறி வகை தோ்வு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் திருச்சி மையத்தில் உள்ள 11 தோ்வுக் கூடங்களில் 3,278 தோ்வா்கள் எழுத உள்ளனா்.
இத் தோ்வுக்கென 11 தோ்வுகூட முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இத் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை, தோ்வு கூடங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 3 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவுக்கு துணை வட்டாட்சியா் நிலையில் ஒரு அலுவலா், ஆயுதம் ஏந்திய ஒரு காவலா், ஒவ்வொரு தோ்வு மையத்திற்கும் தோ்வைக் கண்காணிக்கும் பொருட்டு 11 ஆய்வு அலுவலா்கள், தோ்வு நடைபெறுவதை பதிவு செய்திட விடியோகிராபா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். காவல்துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வுக் கூடங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தோ்வா்கள் கைப்பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களையும் எடுத்து வரஅனுமதி இல்லை என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

